Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“பா ரஞ்சித் மீண்டும் ஒரு ட்ரண்ட்டை உருவாக்கியுள்ளார்…” வெற்றிமாறன் பாராட்டு!

Webdunia
செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (16:07 IST)
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கியுள்ள நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

இயக்குனர் பா ரஞ்சித் சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றிக்குப் பிறகு இப்போது முற்றிலும் வளர்ந்து வரும் கலைஞர்களை வைத்து நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். வழக்கமான தன் தொழில் நுட்பக்கலைஞர்கள் இல்லாமல் நிறைய புதுமுகக் கலைஞர்களோடு இந்த படத்தில் பணியாற்றி வருகிறார். இந்த திரைப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படம் சாதாரண காதல் படமாக இல்லாமல் காதலைப் பற்றிய அரசியல் படமாக இருக்கும் என இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று நடந்தது. அதில் இயக்குனர் வெற்றிமாறன் கலந்துகொண்டு பேசினார். அப்போது “ ரஞ்சித்தின் அட்டகத்தி பார்த்த போது ஒரு மாற்றத்தின் ஆரம்பமாக தோன்றியது. அதே உணர்வு இப்போது ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தின் டிரைலர் பார்க்கும்போதும் தோன்றுகிறது. அனைவரும் பேச வேண்டாம் என நினைக்கும் விஷயங்கள் விவாதத்தை இந்த படம் உருவாக்கும். ரஞ்சித் மீண்டும் இந்த படம் மூலமாக புதிய ட்ரண்ட்டை உருவாக்கியுள்ளார்” என பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

வேட்டையன் ரிலீஸாகியும் 100 திரைகளில் ஓடும் லப்பர் பந்து… உண்மையிலேயே கெத்துதான்!

பொங்கல் ரிலீஸில் இருந்து பின் வாங்கும் அஜித்தின் குட் பேட் அக்லி… பின்னணி என்ன?

விஜய் சேதுபதி மிஷ்கினின் ‘டிரெய்ன்’ பட ரிலீஸ் எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments