Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் குரலில் 'வெறித்தனம்' பாடல்: இன்று வெளியாவதால் பரபரப்பு!

Webdunia
ஞாயிறு, 1 செப்டம்பர் 2019 (08:41 IST)
தளபதி விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் 'பிகில் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
 
இந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் 'பிகில் படத்தின் அப்டேட்கள் தினமும் இருக்கும் என இந்த படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி ஏற்கனவே தனது டுவிட்டரில் தெரிவித்து இருந்தார்.
 
அந்த வகையில் இன்று செப்டம்பர் 1 என்பதால் இன்றைய முதல் அப்டேட்டை அர்ச்சனா தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 'பிகில் படத்தில் விஜய் பாடிய வெறித்தனம்' என்ற பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக அர்ச்சனா கல்பாதி அறிவித்துள்ளார்.
 
வெறித்தனம் பாடலை விவேகா எழுதியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் கம்போஸ் செய்த இந்த பாடலில் இடம்பெற்ற  இரண்டு வரிகள் நேற்று வீடியோவாக வெளியிடப்பட்டது. விஜய்யின் வித்தியாசமான குரலில் அமைந்துள்ள இந்த பாடலுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று முதல் தினமும் பிகில் படத்தின் அப்டேட்டுக்கள் வரவுள்ளதை அடுத்து சமூக வலைதளங்களில் தினமும் 'பிகில் படம் டிரெண்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே விஜய் ரசிகர்கள் டுவிட்டரை இன்னும் ஒரு மாதத்திற்கு தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் க்யூன் யாஷிகாவின் லேட்டஸ்ட் அசத்தல் புகைப்படத் தொகுப்பு!

ஸ்டைலிஷ் லுக்கில் ஹூமா குரேஷியின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அந்த இரண்டு படங்களுக்கு விருதுகள் இல்லாதது ஏமாற்றமே- வைரமுத்துவின் வாழ்த்துகளும் ஆதங்கமும்!

‘ஆடுஜீவிதம்’ படத்திற்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை? ரசிகர்கள் அதிருப்தி

திரையரங்கில் ஹிட்டடித்த ‘பறந்து போ’… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments