Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்பு படத்தில் ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர்!

Webdunia
திங்கள், 25 அக்டோபர் 2021 (18:10 IST)
சிம்பு நடிக்கும் வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடந்து வருகிறது.

நடிகர் சிம்பு தனது திரையுலக வாழ்க்கையின் இரண்டாம் இன்னிங்ஸில் இருக்கிறார். இதையடுத்து அவர் நடித்துள்ள மாநாடு திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில் அடுத்து அவர் நடிக்கும் திரைப்படமான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் மேலும் பயங்கரமான எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு திருச்செந்தூரில் நடந்து முடிந்துள்ளது. அடுத்த கட்டப் படப்பிடிப்புக்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதையடுத்து இந்த படத்தை விரைவில் முடித்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிடலாம் என்ற முடிவில் உள்ளதாம் படக்குழு. இந்நிலையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இப்போது முமபையில் நடந்து வருகிறது. இதற்காக சிம்பு மும்பைக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் மும்பையில் நடக்கும் சண்டைக்காட்சிகளை படமாக்க ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டரான லீ விட்டேகர் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவர் ஏற்கனவே விஸ்வரூபம் மற்றும் ஆரம்பம் ஆகிய தமிழ் படங்களில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘மகாராஜா’ இயக்குனர் நித்திலனை அழைத்துப் பாராட்டிய ஆஸ்கர் வென்ற திரைக்கதை எழுத்தாளர்!

வட சென்னை 2 எப்போது தொடங்கும்… குபேரா பட விழாவில் தனுஷ் கொடுத்த அப்டேட்!

’மதயானை கூட்டம்’ இயக்குனர் விக்ரம் சுகுமாரன் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்..!

முத்த மழை பாடல்! தீ பெஸ்ட்டா? சின்மயி பெஸ்ட்டா? - ஒப்பீடு குறித்து பாடகி சின்மயி கருத்து!

கமல் படத்தை ரிலீஸ் செய்தால் தியேட்டரை கொளுத்துவோம்! - கர்நாடக தியேட்டர்களுக்கு மிரட்டல்!

அடுத்த கட்டுரையில்
Show comments