Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல்கேரியா செல்லும் வெங்கட்பிரபு, சூர்யா

Webdunia
புதன், 1 அக்டோபர் 2014 (10:09 IST)
மாஸ் படத்துக்காக வெங்கட்பிரபு, சூர்யா உள்ளிட்ட மாஸ் டீம் இந்த மாதம் பல்கேரியா செல்லவுள்ளது.
 
வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா இரு வேடங்களில் நடிக்கும் படம் மாஸ். இதில் மூன்று முன்னணி காமெடி நடிகர்கள் சூர்யாவின் கண்களுக்கு மட்டும் தெரியும் ஆவியாக வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நயன்தாரா, எமி ஜாக்சன் இருவரும் ஹீரோயின்கள்.
 
சென்னையில் தொடங்கிய மாஸ் படத்தின் நாற்பது சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டன. இரண்டாவது ஷெட்யூல்ட் வரும் 6 -ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. அதனையடுத்து 15 -ஆம் தேதி பாடல் காட்சிகளை படமாக்க இரண்டுவார பயணமாக மாஸ் யூனிட் பல்கேரியா செல்கிறது. சூர்யாவுடன் எமி ஜாக்சன், நயன்தாரா ஆகியோரும் பல்கேரியா செல்லவிருப்பதாக படயூனிட் தெரிவிக்கிறது.
 
யுவன் இசையமைக்கும் இந்தப் படத்தில் ஸ்ரீமன், பிரேம்ஜி அமரன் ஆகியோருடன் ஜெயராமும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா படத்தை தயாரிக்கிறார்.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments