Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

vinoth
சனி, 18 மே 2024 (16:25 IST)
விஜய் அரசியலில் இறங்கப் போவதால் தற்போது நடித்து வரும் கோட் படத்துக்குப் பிறகு இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிப்பேன் என அறிவித்துள்ளார். இதனால் தற்போது அவர் நடித்து வரும் GOAT திரைப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் அவரோடு பிரசாந்த்,பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து வரும் நிலையில்  செப்டம்பர் 5 ஆம் தேதி இந்த படத்தின் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் விஎஃப்எக்ஸ் மற்றும் டி ஏஜிங் பணிகளுக்காக வெங்கட்பிரபு அமெரிக்கா சென்றார்.

இப்போது அங்கிருந்து ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அதில் “படத்தின் வி எஃப் எக்ஸ் பணிகள் வெற்றிகரமாக முடிந்துவிட்டன. இனியும் ரிலீஸுக்காக காத்திருக்க முடியாது” என தெரிவித்து, விஜய்யின் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மெய்யழகன் படத்தின் முதல் நாள் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

அந்த பெண்தான் என்னை டார்ச்சர் செய்தார்… குற்றச்சாட்டுகளை மறுத்த ஜானி மாஸ்டர்!

பிரபாஸ் படத்தில் வில்லன், வில்லியாக சைஃப் அலிகான் & கரீனா கபூர்!

சிம்புவின் அடுத்த படத்தை இயக்கப் போவது இவரா?

பூஜா ஹெக்டேவுக்கு நன்றி தெரிவித்த சூர்யா 44 படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments