Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை 28 படத்துக்கு சிம்பு செய்த உதவி – மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட இயக்குனர்!

Webdunia
புதன், 8 ஜூலை 2020 (07:54 IST)
சிம்புவின் நடிப்பில் மாநாடு படத்தை இயக்கிவரும் வெங்கட்பிரபு அவருடனான படப்பிடிப்பு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

பல சர்ச்சைகள் மற்றும் தாமதங்களுக்குப் பின் சிம்புவின் மாநாடு படப்பிடிப்பு ஒருவழியாக தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படப்பிடிப்பில் சிம்புவுடனான நட்புப் பற்றி இயக்குனர் வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார்.

அதில் ‘ சிம்புவை எனக்குப் பல வருடமாக தெரியும். எனது முதல் படமான சென்னை 28ல் சரோஜா சாமான்னிக்கால்லோ என்ற பாடலை க்ளைமேக்ஸுக்கு முன்னர் வைக்க சொல்லி அவர்தான் அறிவுரை வழங்கினார். மேலும் மதுரை ஏரியாவை விற்கவும் அவர்தான் உதவி செய்தார். அவருடன் பணிபுரிய வேண்டும் என்பது நீண்டநாள் கனவு. அது இப்போதுதான் நிறைவேறியுள்ளது.

சிம்பு ஞாயிற்றுக்கிழமைகளில் படப்பிடிப்புக்கு வரமாட்டார் என சொல்லப்படுகிறது. ஆனால் நான் அவரை வைத்து ஞாயிற்றுக்கிழமை முழுவதும் படப்பிடிப்பை நடத்தினேன். சிம்புவை பற்றி மற்றவர்கள் சொல்லும் குறை ஆச்சர்யமாக உள்ளது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments