Webdunia - Bharat's app for daily news and videos

Install App

GOAT படம் SAC கதைன்னு ரிலீஸுக்குப் பிறகுதான் தெரிந்தது… வெங்கட்பிரபு பதில்!

vinoth
வெள்ளி, 18 அக்டோபர் 2024 (07:56 IST)
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த GOAT திரைப்படம் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். யுவன் இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்திருந்தார்.

படம்  ரிலீஸ் ஆனதில் இருந்து படம் கலவையான விமர்சனங்களதான் பெற்றாலும் வசூலில் கலக்கியது. திரையரங்குகள் மூலமாக சுமார் 455 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. படம் பெரியளவில் வசூலித்தாலும் படத்தின் மீது ஏராளமான எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தன. அதில் முக்கியமானது படம் பல படங்களின் கலவையாக உருவாக்கப்பட்டுள்ளது என்பதுதான்.

முக்கியமாக கோட் படத்தின் கதையும் பல ஆண்டுகளுக்கு முன்னர் எஸ் ஏ சி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த ராஜதுரை படத்தின் கதையும் ஒன்றுதான் என ரசிகர்கள் கூறினர். அதுபற்றி இப்போது பேசியுள்ள வெங்கட்பிரபு “ரிலீஸூக்குப் பிறகுதான் ராஜதுரை படத்தின் கதை GOAT படத்தின் கதை இரண்டுக்கும் உள்ள ஒற்றுமைகள் எனக்குத் தெரியவந்தன. இது முன்பே தெரிந்திருந்தால் கோட் படத்தை இன்னும் சிறப்பாக எடுத்திருப்பேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெயம் ரவியின் ‘பிரதர்’ பட ரன்னிங் டைம் அப்டேட்!

நகைச்சுவை பட்டாளத்தின் இளமை துள்ளும் நகைச்சுவை திரைப்படம் "கா க் கா"

தென்னிந்திய சினிமாவில் புது முக மாடல் நடிகை அறிமுகம்.....

துஷாரா விஜயனின் டிரடிஷனல் ட்ரஸ் போட்டோ ஆல்பம்!

அதுல்யா ரவியின் லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments