Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெங்கட்பிரபு படத்தில் அஸ்வின், முரளி விஜய்...?

வெங்கட்பிரபு படத்தில் அஸ்வின், முரளி விஜய்...?

Webdunia
செவ்வாய், 26 ஏப்ரல் 2016 (14:49 IST)
வெங்கட்பிரபு தற்போது சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார்.


 


இதில் முதல் பாகத்தில் இடம் பெற்ற ஜெய், சிவா, பிரேம்ஜி அமரன், அரவிந்த் ஆகாஷ், நிதின் சத்யா, விஜய் வசந்த் உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள். மேலும் வைபவ், மகத் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
 
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. கிரிக்கெட் படம் என்பதால் தமிழக கிரிக்கெட் வீரர்களான முரளி விஜய்யும், அஸ்வினும் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அனேகமாக ஏதாவது ஒரு காட்சியில் அல்லது ஒரு பாடல் காட்சியில் தோன்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் முரளி விஜய்யும்இ அஸ்வினும் விளையாடி வருவதால் இவர்கள் சம்மந்தப்பட்ட காட்சிகள், ஐ.பி.எல் முடிந்த பிறகு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments