Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோட் படத்தின் க்ளைமேக்ஸ் இந்த படத்தில் இருந்து சுட்டதா?... கண்டுபிடிச்ச நெட்டிசன்கள்!

Webdunia
செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (15:05 IST)
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த GOAT திரைப்படம் கடந்த செப்டம்பர் 5 ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். யுவன் இசையில் சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவில் படம் மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆனது.

தமிழ் ரசிகர்களுக்கு இந்த படம் மிகப்பெரிய அளவில் கனெக்ட்டாக அமைந்துள்ளது. படத்தில் இடம்பெறும் சி எஸ் கே சம்மந்தப்பட்ட காட்சிகள் ரசிகர்களுக்கு கூஸ்பம்ப் கொடுத்தன. ஆனால் மற்ற மாநில மொழி ரசிகர்கள் இதை ரசிக்கவில்லை. இதுபற்றி பேசியுள்ள இயக்குனர் வெங்கட்பிரபு “படத்தில் சி எஸ் கே ரெஃபரன்ஸ் இருப்பதால் வெளிமாநில ரசிகர்களுக்குப் படம் பிடிக்கவில்லை போல. நான் சி எஸ் கே அணிக்கு சாதகமாகக் காட்சிகள் வைத்திருப்பதால் மும்பை மற்றும் பெங்களூர் ரசிகர்கள் ட்ரோல் செய்கிறார்கள்” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி பைனல் ஸ்கோர் என்ற ஹாலிவுட் படத்தில் காப்பி அடிக்கப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் கண்டுபிடித்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். பைனல் ஸ்கோர் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி ஒரு கால்பந்து இறுதிப் போட்டியில் நடப்பது போல உருவாக்கப்பட்டிருக்கும். அதைக் கொஞ்சம் மாற்றி சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபில் போட்டி காட்சிப்படுத்தி இருந்தார் வெங்கட்பிரபு என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தேவதை வம்சம் நீயோ… திஷா பதானியின் கலர்ஃபுல் க்ளிக்ஸ்!

ரிலீஸுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பே 130 கோடி ரூபாய் சம்பாதித்த நோலனின் ‘ஒடிசி’!

பிரபாஸின் ‘ஸ்பிரிட்’ படத்துக்கு இசையமைக்கிறாரா அனிருத்?

நடிப்பு சலிப்பை ஏற்படுத்தினால் uber ஓட்டுனர் ஆகிவிடுவேன் – ஃபஹத் பாசில் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments