மாநாடு படத்தை செல்போனில் பதிவு செய்யாதீர்கள்… வெங்கட் பிரபு வேண்டுகோள்!

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2021 (10:41 IST)
சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது மாநாடு திரைப்படம்.

சிம்புவின் ‘மாநாடு’ படம் பல்வேறு தடைகளை தாண்டி  திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படத்திற்கு விமர்சகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை தந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு சிம்பு நடிப்பில் அனைத்துத் தரப்பினருக்கும் பிடித்த படமாக மாநாடு அமைந்துள்ளது. ரிலிஸ் ஆனதில் இருந்து ஐந்து நாட்களாக வசூல் குறையாமல் இருப்பதே இந்த படத்தின் வெற்றியின் சாட்சி.

இந்நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் செல்போனில் பதிவு செய்யப்பட்டு ரசிகர்களால் சமூகவலைதளங்களில் பகிரப்படுகின்றன. இதுகுறித்து கவலை தெரிவித்துள்ள இயக்குனர் வெங்கட்பிரபு ‘ரசிகர்கள் செல்போனில் பதிவு செய்து அதை பரப்ப வேண்டாம். அனைவரும் திரையரங்கில் வந்து படத்தை பாருங்கள்’ என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

அடுத்த கட்டுரையில்
Show comments