Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெர்சலுக்கு இணையாக வேலைக்காரன்? படக்குழு தீவிரம்!!

Webdunia
சனி, 23 டிசம்பர் 2017 (17:27 IST)
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று வெளியாகியுள்ள படம் வேலைக்காரன். வழக்கமான காதல், காமெடி இல்லாமல் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். 
 
படத்திற்கு ஊடகங்களும், சமூக வலைத்தள பயனாளிகளும் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். உலகம் முழுவதும் 1000-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியான இப்படம் இந்தியாவில் மட்டும் முதல் நாளில் ரூ.4.15 கோடி வசூல் செய்துள்ளதாம். 
 
இந்நிலையில், சென்னையில் வேலைக்காரன் திரைப்படத்தின் தியேட்டர்கள் அதிகரிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அதாவது மெர்சல் ரிலீஸான தியேட்டர்களின் எண்ணிக்கைக்கு இணையாக வெளியிடப்படவுள்ளதாம். 
 
வேலைக்காரன் படத்துடன் வெளிவந்த சந்தானம் நடித்த சக்க போடு போடு ராஜா திரைப்படத்திற்கு சுமாரான விமர்சனங்கள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான்.. என்ன காரணம்?

5 பிரபலங்கள் இருந்தும் மண்ணை கவ்விய ‘தக்லைஃப் வசூல்.. அதிர்ச்சி தகவல்..!

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments