Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகத்தில் அமலா பால்

வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகத்தில் அமலா பால்
, புதன், 23 நவம்பர் 2016 (12:42 IST)
சௌந்தர்யா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்துக்கு நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்றுதான் பெயர் வைத்திருந்தனர். 


 
 
அதனை தற்போது வேலையில்லா பட்டதாரி 2 என மாற்றியுள்ளனர். வேலையில்லா பட்டதாரியில் நடித்த ரகுவரன் வேடத்தைதான் இரண்டாம் பாகத்திலும் தனுஷ் செய்கிறார்.
 
இதனைத் தொடர்ந்து எழுந்த முக்கியமான கேள்வி, வேலையில்லா பட்டதாரியில் தனுஷின் காதலியாக நடித்த அமலா பால் இரண்டாம் பாகத்தில் இடம்பெறுவாரா?
 
இதுவரை இந்தக் கேள்விக்கு இன்னும் யாரும் நேரடியாக பதில் சொல்லவில்லை. அதேநேரம் அமலா பால் மட்டுமின்றி தனுஷின் அப்பாவாக நடித்த சமுத்திரகனியும் இரண்டாம் பாகத்தில் இடம்பெறுவார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
 
விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சினி பாப்கார்ன் - காப்பியடித்தாரா பாரதிராஜா...?