Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“ரஜினி, கமல் படங்களை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம்” – வாட்டாள் நாகராஜ்

Webdunia
புதன், 11 ஏப்ரல் 2018 (18:27 IST)
‘ரஜினி, கமல் படங்களைக் கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம்’ என வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார்.
 
கர்நாடகாவில் இருந்து உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திய காவிரித் தண்ணீரை வழங்கவில்லை என தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சினிமாத்துறையினர் கூட சமீபத்தில் போராட்டம் நடத்தினர். சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்திருக்கும் கமல், ரஜினி கூட காவிரித் தண்ணீருக்காகக் குரல் கொடுத்து வருகின்றனர்.
 
இந்நிலையில், ‘ரஜினி, கமல் படங்களைக் கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம்’ என கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார். தமிழக – கன்னட எல்லையான அத்திப்பள்ளியில் நடைபெற்ற போராட்டத்தில் இதனைத் தெரிவித்துள்ளார் அவர்.
 
ரஜினியின் ‘கபாலி’ பட ரிலீஸின்போதும் வாட்டாள் நாகராஜ் பிரச்னை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த க்ரீத்தி ஷெட்டி!

பொன்னிற உடையில் தேவதையாய் மிளிரும் ரித்து வர்மா!

படை தலைவன் படத்தின் ஒரு வார கலெக்‌ஷன் இத்தனைக் கோடியா?

ரிலீஸான இரண்டாவது நாளே இணையத்தில் கசிந்த தனுஷின் ‘குபேரா’ திரைப்படம்!

பல ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி & மோகன்லால் இணையும் படம்… லீக்கான டைட்டில்!

அடுத்த கட்டுரையில்
Show comments