Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ட்ரெய்லர்லையே மோதி பாத்துடலாம்!? ஒரே நாளில் துணிவு, வாரிசு ட்ரெய்லர் ரிலீஸ்?

Webdunia
செவ்வாய், 27 டிசம்பர் 2022 (11:11 IST)
பெரிதும் எதிர்பார்க்கப்படும் அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு இரண்டு பட ட்ரெய்லர்களும் ஒரே நாளில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகர்களை கொண்ட நடிகர்கள் அஜித் மற்றும் விஜய். எச்.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் அஜித்குமார் நடித்துள்ளார். வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் விஜய் நடித்துள்ளார். இரண்டு படங்களும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ல் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலம் கழித்து இரண்டு நடிகர்களின் படங்களும் ஒரே நாளில் வெளியாவதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சமீபத்தில் வாரிசு படத்தின் ஆடியோ வெளியீடு நடந்த நிலையில், துபாய் புர்ஜ் கலிபாவிற்கு மேலிருந்து துணிவு பேனருடன் ஸ்கை டைவிங் செய்து துணிவு டீம் ட்ரெண்ட் ஆகினர். மேலும் துணிவு படத்தின் ட்ரெய்லர் டிசம்பர் 31ம் தேதி வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

துணிவு படத்தின் ட்ரெய்லர் நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வாரிசு படக்குழுவும் புத்தாண்டில் ட்ரெய்லர் வெளியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் பட ரிலீஸுக்கு முன்னர் ட்ரெய்லரிலேயே இரண்டு படங்களும் போட்டி போடும் சந்தர்ப்பம் அமைந்துள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான்.. என்ன காரணம்?

5 பிரபலங்கள் இருந்தும் மண்ணை கவ்விய ‘தக்லைஃப் வசூல்.. அதிர்ச்சி தகவல்..!

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments