Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வராஹ ரூபம் பாடல் எப்போது ஓடிடி பதிப்பில் சேர்க்கப்படும்… இயக்குனர் தகவல்!

Webdunia
சனி, 3 டிசம்பர் 2022 (16:33 IST)
கேஜிஎஃப் திரைப்படத்தின் மூலம் பிரபலமான தயாரிப்பு நிறுவனமானது ஹோம்பலே பிலிம்ஸ். அடுத்து வரிசையாக பல திரைப்படங்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில் அவர்களின் அடுத்த வெளியீடாக ரிலீஸ் ஆன காந்தாரா திரைப்படம் பாராட்டுகளைப் பெற்று  இந்தியா முழுவதும் வசூலில் கலக்கியது. ஆனால் இந்த திரைப்படத்தில் காடுகளில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்கு எதிரான கருத்துகள் உள்ளதாக இடதுசாரியினர் கடுமையான விமர்சனங்களை வைத்தனர்.

இந்த படத்தில் வராஹ ரூபம் என்ற பாடல் தங்களின் பாடலை காப்பியடித்து உருவாக்கப் பட்டதாக, தாய்க்குடம் பிரிட்ஜ் என்ற குழுவினர் புகாரளிக்க, அது சர்ச்சையானது. இந்நிலையில் இப்போது ஓடிடியில் காந்தாரா திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், வராஹ ரூபம் பாடல் நீக்கப்பட்டு, அதற்குப் பிறகு வேறு காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் ஓடிடியில் படம் பார்த்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

அதன் பின்னர் அந்த பாடலை ஒளிபரப்ப தடை இல்லை என நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், ப்ரைம் வீடியோவில் உள்ள படத்தில் மீண்டும் இணைக்கப்பட்டதாக தகவல்கள் வந்தன. ஆனால் சிறிது நேரத்திலேயே மீண்டும் அந்த பாடல் இப்போது நீக்கப்பட்டுள்ளதால் மீண்டும் ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் இப்போது வழக்கின் தீர்ப்பு காந்தாரா படக்குழுவுக்கு ஆதரவாக வந்துள்ள நிலையில், விரைவில் அந்த பாடல் ஓடிடி பதிப்பில் இணைக்கப்படும் என படத்தின் இயக்குனரும், கதாநாயகனுமான ரிஷப் ஷெட்டி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தயாரிப்பாளர் லலித் மகன் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் தலைப்பு இதுதானா?... கதை ‘மைனா’ மாதிரி இருக்கே!

தக் லைஃப் படத்தின் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி இதுதான்!

பாரதிராஜா வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த இளையராஜா!

Full Vibe மாமே..! இறங்கி சம்பவம் செய்த அஜித்..! ‘Good Bad Ugly’ விமர்சனம்..!

பாலிவுட் ஒரிஜினல் கதைகளில் கவனம் செலுத்த வேண்டும்… ரீமேக் வொர்க் அவுட் ஆகாது- ராஷி கன்னா ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments