Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உனக்கு பிடிக்குதோ இல்லையோ... "ஐ லவ் யூ" அண்ணனை வாழ்த்திய வனிதா!

Webdunia
செவ்வாய், 19 நவம்பர் 2019 (17:09 IST)
தமிழ் சினிமாவில் நட்சத்திர குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும் தனது கடின உழைப்பால் கொஞ்சம் கொஞ்சமாக சினிமா துறையில் முன்னேறி வருபவர் நடிகர் அருண் விஜய். பல வருடங்களுக்கு பின்னர் அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் வில்லன் ரோலில் நடித்திருந்தார். அந்த படத்தில் இவரது நடிப்பை கண்டு தமிழ் சினிமா உலகமே இவரை ஒட்டுமொத்தமாக திரும்பி பார்த்து வாய்பிளந்தனர். 
அதையடுத்து தற்போது  துருவங்கள் பதினாறு பட இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் 'மாஃபியா' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் அருண் விஜய்க்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 
 
இந்நிலையில் அண்ணன் அருண் விஜய்க்கு ட்விட்டரில் வனிதா வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், கருத்து வேறுபாடுகளை தீர்த்துக் கொள்ளலாம். ஒரு வாழ்க்கை ஒரு குடும்பம் ஒரே ரத்தம். நீங்களும், நானும் வெவ்வேறு விதமாக பயணிக்கலாம். ஆனால்,  ஒன்றாகத் தான் துவங்கினோம். நம் குடும்பத்தை பெருமையடையச் செய்ய வேண்டும். #HBDArunVijay உங்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ ஐ லவ் யூ என்று குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் வனிதா.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனிருத் இசைக்காக ஒரு தடவை பார்க்கலாம்.. விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ விமர்சனம்..!

71வது தேசிய விருது அறிவிப்பு.. ஹரிஷ் கல்யாண் நடித்த படத்திற்கு சிறந்த பட விருது..!

ரஜினியின் ‘கூலி’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்த சென்சார்.. வன்முறை அதிகமா?

பாக்ஸ் ஆபிஸில் அசத்தும் 'மகாவதாரம் நரசிம்மா': ரூ.53 கோடி வசூல் சாதனை

அடுத்தடுத்த டிராப்புகள்.. தேசிய விருது வாங்கிய வெற்றிமாறனுக்கே இந்த நிலைமையா?

அடுத்த கட்டுரையில்
Show comments