Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நைட்டியோடு நடுரோட்டில் செய்தியாளர்களுடன் மல்லுக்கட்டிய நடிகை வனிதா

Webdunia
வியாழன், 20 செப்டம்பர் 2018 (15:47 IST)
நடிகர் விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியினரின் மகள் வனிதா. இன்று விஜயகுமார் தனது வீட்டை ஆக்கிரமித்துக்கொண்டு காலி செய்ய மறுப்பதாக கூறி தனது மகள் மீது போலீஸாரிடம் புகார் அளித்தார். 
 
விஜயகுமாருக்கு மதுரவாயல் அருகே ஆலப்பாக்கத்தில் வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டை சினிமா படப்பிடிப்பிற்காக வாடகைக்கு வழங்குவது வழக்கமானது. அதுபோல அவரது மகள் வனிதாவிற்கு படப்பிடிப்பிற்காக வாடகைக்கு விட்டதாக தெரிகிறது. 
 
குறிப்பிட்ட படப்பிடிப்பு முடிந்த பின்னரும் வனிதா வீட்டை காலி செய்யவில்லை. இது குறித்து விஜயகுமார் தரப்பு அவரிடம் கேட்ட போது இது எனது சொத்து, வீட்டை காலி செய்ய முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 
 
இதனால், வேறுவழியின்றி நடிகர் விஜயகுமார், தனது வீட்டில் வசிக்கும் மகள் வனிதா, வீட்டை காலி செய்யாமல் சொந்தம் கொண்டாடுவதாகவும், அவரை வீட்டில் இருந்து காலி செய்து தர வேண்டும் எனவும் புகார் மனு அளித்தார். 
 
இதனால், செய்தியாளர்கள் இது குறித்து செய்தி சேகரிக்க ஆலப்பாக்கத்தின் வீட்டிற்கு சென்றனர். அப்போது வனிதா செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். பின்னர் ஒரு கட்டத்தில் தகாத வார்த்தைகளையும் பயன்படுத்தியுள்ளார். 
 
நைட்டியில் நடுரோட்டில் நின்றுக்கொண்டு இவ்வாறு செய்தியாளர்களிடம் மோசமாக நடந்துக்கொண்டு அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது. மேலும், இந்த வாய்த்தகராறு குறித்து மதுரவாயல் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷின் இட்லி கடை பட ஷூட்டிங் பாதியிலேயே நிறுத்தம்… காரணம் என்ன?

கம்பேக் கொடுக்க மார்க் ஆண்டனி 2 எடுக்க விரும்பும் விஷால்.. சம்மதிப்பாரா ஆதிக்?

இனி வருடத்துக்கு இரண்டு படங்கள் வரும்… ரசிகர்களுக்கு சூர்யா நம்பிக்கை!

விடுதலை 2 படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?... வெளியான தகவல்!

போலீஸ் அனுமதிக்காத போதும் ஏன் தியேட்டர் விசிட்?... அல்லு அர்ஜுன் அளித்த விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments