Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்ரம் படத்தில் வாணி போஜன்… அடுத்தடுத்து குவியும் வாய்ப்புகள்!

Webdunia
வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (16:35 IST)
நடிகை வாணி போஜன் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.

ஒரு காலத்தில் சீரியலில் நடிக்கும் நடிகைகளை சினிமாவில் நடிக்க வைக்க யோசிப்பார்கள் . அப்படியே நடித்தாலும் அண்ணி தங்கை வேடங்கள் மட்டுமே கொடுப்பார்கள். அதை முதலில் உடைத்தவர் பிரியா பவானி சங்கர். சீரியலில் இருந்து சினிமாவுக்கு சென்று வெற்றிகரமான கதாநாயகியாக வலம் வருகிறார்.

அவருக்குப் பிறகு சின்னத்திரை நயன்தாரா என்று சீரியல் ரசிகர்களால் அழைக்கப்பட்டு பெரும் பிரபலமடைந்தவர் நடிகை வாணி போஜன். ஆரம்பத்தில் விமான பணிப் பெண்ணாக இருந்து பின்னர் மாடலிங் திரையில் நுழைந்தார். அதன் மூலம் கிடைத்த வாய்ப்பில் தான் சீரியல் நடிகையானார்.  சன் டிவியில் ஒளிபரப்பான " தெய்வமகள் " சீரியலில் நடித்து குறுகிய காலத்தில் குடும்ப ரசிகர்களிடையே படு பேமஸ் ஆகிவிட்டார். அதைத்தொடர்ந்து வெள்ளித்திரையில் நுழைய அம்மணிக்கு வாய்ப்பு கிடைத்தது. அசோக் செல்வன் நடித்த  ‘ஓ மை கடவுளே’ படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் மனதில் மீரா அக்காவாக நுழைந்துவிட்டார்.

அதையடுத்து சில படங்களில் கமிட்டாகியுள்ள வாணிபோஜன் இப்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் ஆகியோர் நடிக்கும் சீயான் 60 படத்தில் நடிக்க உள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க்யூட்டான லுக்கில் ஹாட்டான போஸ் கொடுத்த திவ்யபாரதி!

அழகுப் பதுமை ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும்.. செல்வராகவனின் இன்றைய தத்துவ முத்து!

மும்பையில் முகாமிட்ட லாரன்ஸின் ‘காஞ்சனா 4’ படக்குழு!

பா ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ படம் தொடங்குவதில் தாமதம்… பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments