Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வணங்கான் பெயரை பயன்படுத்த தடை விதிக்க கோரிய வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி

Mahendran
வெள்ளி, 19 ஜூலை 2024 (18:46 IST)
"வணங்கான்" பெயரை பயன்படுத்த இயக்குனர் பாலாவுக்கு தடை விதிக்க கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. "வணங்கான்" என்ற பெயரில் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது

வணங்கான் என்ற தலைப்பை ஏற்கனவே பதிவு செய்துள்ளதால் தடை விதிக்கக்கோரி ஆரஞ்ச் புரொடக்சன்ஸ் உரிமையாளர் எஸ்.சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் 2 ஆண்டுகள் அமைதியாக இருந்த பின், பணம் பறிக்கும் நோக்கில் கடைசி நேரத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என இயக்குனர் பாலா தரப்பு வழக்கறிஞர் வாதம் செய்தார். இந்த வாதத்தை ஏற்று கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் "வணங்கான்" பெயரை பயன்படுத்த இயக்குனர் பாலாவுக்கு தடை விதிக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது. எனவே "வணங்கான்"  டைட்டிலுக்கு இருந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.

அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்த ‘வணங்கான்’ திரைப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையில், குருதேவ் ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவான இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் ரிலீஸ் தேதியை அறிவித்த ‘குட் பேட் அக்லி’ படக்குழு.. என்ன ஆச்சு விடாமுயற்சி?

அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த தமிழ் நடிகர்.. வைரல் புகைப்படம்..!

'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க  டிஜிட்டல் பிரீமியர் ஸ்ட்ரீமாகவுள்ளது !

“சங்கீதம் இல்லாமல் வாழ்க்கை இல்லை” 'மாத்திக்கலாம் மாலை' ஆல்பம் வெளியீட்டு நிகழ்வில்- சுகாசினி பேச்சு!

விஜய் தவறான வழியில் செல்வது வருத்தமாக உள்ளது: இயக்குனர் மோகன் ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments