Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மலையாளத்தில் தயாராகும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்

மலையாளத்தில் தயாராகும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
, சனி, 28 பிப்ரவரி 2015 (16:06 IST)
பொதுவாக மலையாளப் படங்கள்தான் தமிழில் ரீமேக் செய்யப்படும். அபூர்வமாக வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தை மலையாளத்தில் ரீமேக் செய்துள்ளனர்.
 
உண்மையில் இந்த பெருமை பஸ்டர் கீடனையே சாரும். அவரது மௌனப்படமான, த ஹாஸ்பிடாலிட்டியை தழுவி மரியாத ராமண்ணா என்ற படத்தை ராஜமௌலி தெலுங்கில் எடுத்தார். அதனை இந்தியில் சன் ஆஃப் சர்தார் என்ற பெயரில் ரீமேக் செய்தனர். மரியாத ராமண்ணாவின் தமிழ் ரீமேக்தான், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். 
 
திலீப், நிக்கி கல்ராணி நடிப்பில் இந்தப் படத்தை, இவன் மரியாதை ராமன் என்ற பெயரில் மலையாளத்தில் ரீமேக் செய்துள்ளனர். சுரேஷ் திவாகர் படத்தை இயக்கியுள்ளார். அடுத்த மாதம் படம் திரைக்கு வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil