Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று மாலை வெளியாகிறதா வலிமை போஸ்டர்!? – பரபரப்பில் அஜித் ரசிகர்கள்!

Webdunia
ஞாயிறு, 11 ஜூலை 2021 (14:34 IST)
அஜித் ரசிகர்கள் நீண்ட காலமாக ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் வலிமை அப்டேட் இன்று வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கும் வலிமை படத்திற்கான அறிவிப்பு வெளியாகி ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை ஒரு ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் கூட வெளி வராததால் அஜித் ரசிகர்கள் அரசியல் தலைவர்கள் முதல் விளையாட்டு மைதானங்கள் வரை அப்டேட் கேட்டு போர்டு பிடித்து வருகின்றனர்.

இந்நிலையில் அடிக்கடி வலிமை அப்டேட் எதிர்பார்த்து ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்வதையும் ரசிகர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். சமீபத்தில் ஜூலை 15க்குள் வலிமை அப்டேட் வெளியாகலாம் என்ற ரீதியில் ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வந்தனர், இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு மேல் வலிமை அப்டேட் வெளியாகலாம் என சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

சிவகார்த்திகேயனுக்கு இவர் வில்லனா? கம்பேக் கொடுக்கும் விஜய் பட வில்லன்! – வீடியோ வெளியிட்ட படக்குழு!

12 ஆயிரம் சம்பளத்துக்கு.. துபாய் பாலைவனத்துல..! – விஜய் சேதுபதிக்கு நடந்த உண்மை சம்பவம்!

'காஞ்சனா 2’ தகவல் எல்லாமே வதந்தி.. ராகவா லாரன்ஸ் விளக்கம்..!

மோசமான தரம்.. ‘இந்தியன்’ படத்தை தியேட்டரில் பார்த்தவர்கள் அதிருப்தி..!

விஜய்யுடன் நடிக்க ரொம்ப நாள் ஆசை..! கடைசி படத்திற்கு ரூட் போட்ட பாலிவுட் இளம் நடிகை!

அடுத்த கட்டுரையில்
Show comments