Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆக்‌ஷனுக்கு நிகராக அதுவும் இருக்கும் – வலிமை அப்டேட் கொடுத்த போனி கபூர்!

Webdunia
வியாழன், 25 மார்ச் 2021 (13:12 IST)
வலிமை படத்தின் செண்டிமெண்ட் காட்சிகள் அதிகமாக இருக்கும் என போனி கபூர் கூறியுள்ளார்.

இந்த ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். ஆனால் படம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் படத்தின் டைட்டில் போஸ்டர் கூட இன்னும் படத்தயாரிப்பாளரால் வெளியிடப்படவில்லை. இந்த படத்தில் கதாநாயகியாக ஹூமா குரேஷியும் வில்லனாக நடிகர் கார்த்திகேயாவும் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகள் மே மாதத்தில் இருந்து தொடங்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய தயாரிப்பாளர் போனி கபூர் ‘வலிமை படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு நிகராக குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் செண்ட்டிமெண்ட் காட்சிகளும் இருக்கும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முன்பதிவிலேயே இவ்வளவு வசூலா? கில்லிக்கு அப்புறம் சச்சினும் கல்லா கட்டுதே!

கேபிஒய் பாலா சினிமா கதாநாயகன் ஆகிறார். அதிகாரபூர்வ அறிவிப்பு..!

க்ரீத்தி ஷெட்டியின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்!

வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்… இன்று முதல் மீண்டெழுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments