Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிநாடு பறக்க இருக்கும் வலிமை படக்குழு… ஹெச் வினோத் பிடிவாதம்!

Webdunia
புதன், 4 நவம்பர் 2020 (09:53 IST)
அஜித் நடிப்பில் உருவாகும் வலிமை படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வரும் நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது.

நேர்கொண்ட பார்வை வெற்றிக்குப் பின்னர் அஜித் இப்போது வலிமை படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த படத்துக்கு அஜித்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கோரோனா லாக்டவுனால் தடைபட்டுள்ளது. இதனால் வலிமை படத்தைப் பற்றிய அப்டேட்டுகளுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் கொரோனா லாக்டவுனுக்கு பின்னர் சில காட்சிகள் சென்னையில் படம் பிடிக்கப்பட்ட நிலையில் இப்போது அடுத்த கட்ட  ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இங்கே சில முக்கியமானக் காட்சிகளை படமாக்கி வருகிறார் ஹெச் வினோத். இந்நிலையில் வெளிநாடுகளில் எடுப்பதாக திட்டமிடப்பட்டு இருந்த காட்சிகளை உள்நாடிலேயே எடுக்கலாமா என தயாரிப்பாளர் யோசிக்க, அந்த காட்சிகளை வெளிநாடுகளில் எடுத்தால்தான் சரியாக இருக்கும் என ஹெச் வினோத் பிடிவாதமாக சொல்லிவிட்டாராம். இதனால் அடுத்தகட்டமாக படக்குழு ஏதாவது ஒரு வெளிநாட்டுக்கு பறக்கும் என சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரு நபர், மரணமற்ற மற்றொரு நபரை சந்திக்கின்றார்... ‘ஏழு கடல் ஏழு மலை’ டிரைலர்..!

ஒரே நாளில் வெளியாகிறதா விக்ரம் மற்றும் ஜெயம் ரவி படங்கள்?

கிளாமர் தூக்கலாக யாஷிகா ஆனந்த் கொடுத்த போஸ்… கலர்ஃபுல் போட்டோஸ்!

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் ஸ்டன்னிங் போட்டோஸ்!

ஷங்கரை அடுத்து அல்போன்ஸ் புத்ரனுக்குக் கதை கொடுக்கும் கார்த்திக் சுப்பராஜ்!

அடுத்த கட்டுரையில்
Show comments