Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லோரையும் பிரிச்சு காமிக்கின்றேன்: பிக்பாஸ் வைஷ்ணவியின் சவால் வீடியோ

Webdunia
வியாழன், 9 ஆகஸ்ட் 2018 (09:58 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான வைஷ்ணவி சில நாட்கள் சீக்ரெட் அறையில் இருந்துவிட்டு தற்போது மீண்டும் பிக்பாஸ் இல்லத்திற்குள் வந்துள்ளார். ஷாரிக் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியபோது அனைவரும் கதறி அழுததாகவும், ஆனால் தான் வெளியேறியபோது யாருமே குறைந்தபட்சம் வருத்தம்கூட படவில்லை என்ற ஆதங்கத்தில் இருந்த வைஷ்ணவி, சீக்ரெட் அறையில் இருந்தபோது தன்னை பற்றி சக போட்டியாளர்கள் புறம் பேசியதால் மனம் நொந்துள்ளார்.
 
வைஷ்ணவியின் மன வருத்தம் இன்று உடைந்து வெளியேறியுள்ளது. இந்த வீட்டில் யாரும் 100% உண்மையாக இல்லை என்றும், என்னை இங்கு மட்டந்தட்டிய மாதிரி என் வாழ்க்கையில் யாருமே என்னை மட்டந்தட்டியது இல்லை என்றும் மும்தாஜ், பாலாஜியிடம் அழுதுகொண்டே கூறுகிறார் வைஷ்ணவி
 
அதன்பின்னர் இங்குள்ள ஒவ்வொருவரையும் ஆட்டை பிரிக்கின்ற மாதிரி, மாட்டை பிரிக்கின்ற மாதிரி பிரித்து காண்பிக்கின்றேன் என்றும், அந்த திறமை தன்னிடம் இருப்பதாகவும் சவால் விடுகிறார். அவருடைய ஆவேசத்தை பார்த்து பாலாஜியும் மும்தாஜூம் அதிர்ச்சி அடைகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாராவது 4 நாள் பிறந்தநாளை கொண்டாடுவார்களா? சூர்யா குறித்து வரும் செய்தி உண்மையா?

'சிறகடிக்க ஆசை’ நாயகியுடன் சிம்புவுக்கு திருமணமா? ஒரு வாரத்திற்கு முந்தைய செய்தி வதந்தியாக வைரல்..!

புடவையில் கண்ணுபடும் அழகில் ஜொலிக்கும் துஷாரா விஜயன்!

ஹாட் & க்யூட் லுக்கில் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

ஓடிடியில் ரிலீஸ் ஆகும் கவனம் ஈர்த்த ‘மனிதர்கள்’ திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments