Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இசையமைப்பாளர் இனியவன் மரணம்… வைரமுத்து இரங்கல்!

Webdunia
திங்கள், 25 அக்டோபர் 2021 (11:50 IST)
இசையமைப்பாளர் இனியவன் மாரடைப்பால் நேற்று இயற்கை எய்தியுள்ளார்.

இது சம்மந்தமாக பாடலாசிரியர் வைரமுத்து எழுதியுள்ள இரங்கலில் ‘“இசை அமைப்பாளர் இனியவன் மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மிகச்சிறந்த இசை அமைப்பாளர். தஞ்சை மாவட்டத்துக்காரர். தேர்ந்த இயக்குனர்களிடம் இவர் கைகோர்த்திருந்தால் திரை இசையைக் கலக்கியிருப்பார்.

‘கவுரி மனோகரி’ படத்தில் கே.ஜே.ஜேசுதாசும் - எஸ்.பி.பியும் இணைந்து பாடிய “அருவி கூட ஜதியில்லாமல் சுரங்கள் பாடுது” பாடல் கேட்டால் இவர் ஆற்றல் புரியும். தலைவர் பிரபாகரனுக்குப் பிடித்த பாடல் அது என்று ஒரு ஈழ நண்பர் என்னிடம் சொன்னார். எனது ‘ஜென்மம் நிறைந்தது’ பாடலுக்கும் இசை இவரே.

ஐந்து நாட்களுக்கு முன்பு கூட பேசினோம். நல்ல உடல் நலனோடு இருந்தார். ‘ஓடங்கள்’ பட இசை அமைப்பாளர் சம்பத் செல்வத்திடம் இசை உதவியாளராக இருந்து அவர் மூலம் தனக்கு அறிமுகம் ஆனவர். நீண்ட கால நண்பர். இவரது உடல் சொந்த ஊரான தஞ்சைப் பகுதியில் அடக்கம் செய்யப்படுகிறது” என இரங்கல் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

160 கோடி ரூபாய் பட்ஜெட்.. வசூல் 50 கோடிதான்… அப்செட்டில் அட்லி!

கலர்ஃபுல் உடையில் கலக்கலான போஸ் கொடுத்த அதிதி ஷங்கர்..!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் க்யூட் ஃபோட்டோ கலெக்‌ஷன்!

பா விஜய் இயக்கத்தில் ஜீவா, அர்ஜுன் நடிக்கும் ‘அகத்தியா’ .. கவனம் ஈர்க்கும் மிரட்டலான டிசர்!

சசிகுமார் & சிம்ரன் நடிக்கும் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments