Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லாம் பார்த்துவிட்ட கமலுக்கு இனி என்ன வேண்டும்? வைரமுத்து வாழ்த்து..!

Webdunia
செவ்வாய், 7 நவம்பர் 2023 (13:19 IST)
உலகநாயகன் கமல்ஹாசன் இன்று தனது 69ஆவது பிறந்த நாளை கொண்டாடிவரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
 
மேலும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட பல அரசியல்வாதிகளும் கமல்ஹாசனுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து தனது சமூக வலைதளத்தில் கமல்ஹாசனுக்கு கவிதை வடிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறிய இருப்பதாவது
 
 
நாம் வாழும் காலத்தின் 
கர்வ காரணங்களுள் ஒன்று
கலைஞானி கமல்ஹாசன்
 
இத்துணை நீண்ட திரைவாழ்வு
அத்துணை பேர்க்கும் வாய்க்காது
 
வாழ்வு கலை இரண்டிலும்
பழையன கழித்துப்
புதியன புகுத்தும்
அந்தண மறவரவர்
 
எல்லாம் பார்த்துவிட்ட கமலுக்கு 
இனி என்ன வேண்டும்?
உடையாத உடல் வேண்டும்;
சரியாத மனம் வேண்டும்
 
வாய்த்திருக்க வாழ்த்துகிறேன்
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஈட்டி இயக்குனரின் படத்தின் மூலம் தயாரிப்பாளராக மீண்டும் களமிறங்கும் விஷால்.. கதாநாயகி இவர்தான்!

சர்ச்சைகள்… நெகட்டிவ் விமர்சனம் இருந்தும் வசூலில் சாதனை படைத்த ‘எம்புரான்’!

விக்ரம் & மடோன் அஸ்வின் படத்தின் தலைப்பு இதுதான்… மாவீரன் படத்தோடு இருக்கும் கனெக்‌ஷன்!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ டிரைலர் எப்போது?... வெளியானது தகவல்!

பஹத் பாசில் & வடிவேலு நடிக்கும் ‘மாரீசன்’ படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments