Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறைவன் கொரொனானு ஒரு படம் ரிலீஸ் பண்ணிருக்கான்… வடிவேலு ஆதங்கம்!

Webdunia
வெள்ளி, 21 மே 2021 (08:26 IST)
கொரோனாவால் மக்கள் அடைந்துள்ள கஷ்டங்கள் குறித்து நகைச்சுவை நடிகர் வடிவேலு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

கொரோனா காரணமாக மக்கள் சொல்லொனா துயரத்துக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் வடிவேலு சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கொரோனாவால் மக்கள் படும் இன்னல்களைப் பற்றி கூறியுள்ளார். அதில் ‘கொரோனானு வந்துருக்கு பாருங்க… பீதி மேலெ பீதி… ஒரு நாளைக்கு நம்மள அறியாம நம்ம கை 200 முறை காது மூக்கு மற்றும் வாய்க்கு போகுது. அதக் கண்ட்ரோல் பண்ண முடியுமா. கடவுள் கொரோனானு ஒரு படத்த ரிலீஸ் பண்ணிருக்கான். வீட்டிலிருந்த படியே அத பாக்க சொல்றான் கடவுள். இந்த படத்த எப்ப தூக்குவான்னே தெரியல. அத தூக்குனாதான் நாம வெளிய வரமுடியும். நான் ஒரு படத்துல சும்மாவே இருக்கறது எவ்வளவு கஷ்டம்னு சவால் விட்டு நடிச்சேன். நான் வெறும் படமாகத்தான் நடித்தேன். ஆனால், உண்மையிலேயே எல்லோரும் சும்மா உட்கார்ந்தால் எப்படி இருக்கும் என்று உணரவைத்து இருக்கிறான் இறைவன். அதனால் அனைவரும் வீட்டிலேயே இருங்கள். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியே செல்லுங்கள். யாரையும் தொட்டு பேசாதீர்கள்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம்! ரவி மோகனுக்கு ஷாக் கொடுத்த ஆர்த்தி!

ஜேசன் சஞ்சய் & சந்தீப் கிஷன் இணையும் படத்தின் ரிலீஸ் திட்டம் என்ன?... வெளியான தகவல்!

‘தக் லைஃப் ஓடிடி ரிலீஸ்.. பரிசோதனை அல்ல நடைமுறை’ – கமல்ஹாசன் பகிர்ந்த தகவல்!

வாடிவாசலுக்குப் பிறகு தனுஷுடன் படம்… உறுதி செய்த வெற்றிமாறன்!

சிவகார்த்திகேயன் பற்றி எழுந்த ட்ரோல்கள்… லப்பர் பந்து இயக்குனரின் ஆதரவுப் பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments