மெல்ல மெல்ல பிக்கப் ஆகும் ‘கேங்கர்ஸ்’… ஒரு வாரக் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

vinoth
வெள்ளி, 2 மே 2025 (11:04 IST)
’கேங்கர்ஸ்’ படத்தின் மூலம் வடிவேலு சுந்தர் சி காம்பினேஷன் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்துள்ளது.  இதனால் இந்த படத்தின் மீது சினிமா ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எழுந்தது. இதில் வடிவேலு பழைய நகைச்சுவை மன்னனாக கம்பேக் கொடுப்பார் என டிரைலர் பார்த்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த வாரம் படம் ரிலீஸான நிலையில் வழக்கம் போல பெரிய அளவில் நேர்மறையான விமர்சனம் கிடைக்கவில்லை. ஆனால் சுந்தர் சி படங்களுக்கு என்றுதான் நல்ல விமர்சனம் வந்துள்ளது?. ரசிகர்கள் மத கஜ ராஜா படத்தை எல்லாம் பார்த்துக் கொண்டாடவில்லையா?. அந்த வகையில் இந்த படத்துக்கு முதல் நாள் வசூல் கணிசமாக இருந்துள்ளது. முதல் நாளில் இந்த படம் தமிழக அளவில் சுமார் 60 லட்ச ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்பட்டது.

அதற்கடுத்த நாட்களிலும் படத்துக்கு பெரிய அளவில் வசூல் இல்லை. ஆனால் வார இறுதி நாட்களில் நல்ல வசூல் கிடைத்ததாக சொல்லப்பட்டது. இந்த வாரம் ரெட்ரோ மற்றும் டூரிஸ்ட் பேமிலி ஆகிய படங்கள் ரிலீஸாகியுள்ள நிலையில் கணிசமான திரைகளில் இருந்து அந்த படம் தூக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு வாரத்தில் இந்த படம் 8 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் படத்தின் ஓடிடி வியாபாரம் மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திரையுலகில் புதிய சாதனை!.. கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறப்போகும் ஜனநாயகன்!..

ஒருவழியாக இயக்குனரை உறுதி செய்த ரஜினி!.. அட இவரா?!...

பிக் பாஸ் தமிழ்: இந்த வார நாமினேஷன் பட்டியலில் சிக்கிய போட்டியாளர்கள் யார் யார்?

2 தோசை தான் கொடுப்போம், 3 தோசை தான் கொடுப்போம்ன்னு சொல்றாங்க: வியன்னா குற்றச்சாட்டு

வாணி போஜனின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்…!

அடுத்த கட்டுரையில்
Show comments