Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விண்டேஜ் பாடல்… அழகான லொக்கேஷன்ஸ்… வித்தியாச வடிவேலு – எப்படி இருக்கு ‘மாரீசன்’ டீசர்!

vinoth
வியாழன், 5 ஜூன் 2025 (13:16 IST)
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன் திரைப்படத்தில் பகத் பாஸில் மற்றும் வடிவேலு இணைந்து நடித்தனர் என்பதும் அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றதற்கு வடிவேலு பஹத் காம்போவும் ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது.

இதனை அடுத்து மீண்டும் பகத் பாஸில் மற்றும் வடிவேலு இணைந்து  மாரீசன் என்ற படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்கி வருகிறார். சூப்பர் குட் பிலிம்ஸ் இந்த படத்தைத் தயாரிக்கிறது. இந்த படத்தின் கடந்த ஆண்டு நடந்து முடிந்த நிலையில் தற்போது பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன.

ஜூலை மாதத்தில் இந்த படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று டீசர் வெளியாகிக் கவனம் பெற்றுள்ளது. வடிவேலு மற்றும் பஹத் இடம்பெறும் காட்சிகள் அழகிய லொகேஷன்கள் விண்டேஜ் பாடலோடு தொடங்க, அதன் பின்னர் இருவருக்குமான மோதல் குறித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன. வடிவேலு ஒரு சேல்ஸ்மேன் லுக்கில் இருக்க, பஹத் போக்கிரி இளைஞனாகக் காணப்படுகிறார். ஒரு ஃபீல்குட் படமாக ‘மாரீசன்’ இருக்கும் என்பதை டீசர் கோடிட்டுக் காட்டுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை… ரசிகர்களின் அளவற்ற அன்புக்கு SJ சூர்யா நன்றி!

KPY பாலா கதாநாயகனாக நடிக்கும் ‘காந்தி கண்ணாடி’… முதல் லுக் போஸ்டர் வெளியீடு!

அஜித் படத்தை தயாரிக்க ஆளில்லையா? இஷ்டத்துக்கு அடித்து விடும் போலி நபர்கள்..!

வெற்றிமாறன் அவசர அவசரமாக விளக்கம் கொடுத்தது ஏன்? பிரபு என்ற அந்த ஒரே ஒரு நபருக்காக தான்..

ஷங்கர் - விக்ரம் திடீர் சந்திப்பு.. ‘அந்நியன் 2’ அல்லது ‘ஐ 2’ உருவாகிறதா?

அடுத்த கட்டுரையில்
Show comments