இறங்கி வந்தார் வடிவேலு! மீண்டும் உருவாகிறது ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’

Webdunia
வெள்ளி, 23 நவம்பர் 2018 (10:43 IST)
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் சிம்பு தேவன் இயக்கத்தில் வடிவேல் ஹீரோவாக நடித்து 2006-ல் வெளியான படம் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’. இந்தப் படம்  அந்த ஆண்டில் மிகப்பெரிய ஹிட்டானது.
 
இப்படத்தின் இரண்டாம் பாகமாக ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ என்ற படத்தை தயாரிக்க ஷங்கர் முடிவு செய்தார். இந்தப் படத்தையும் சிம்புதேவன் இயக்கவிருந்தார். நடிகர் வடிவேலுவே ஹீரோவாக நடிக்க இருந்தார்.
 
இதற்காக சென்னையில் பெரிய செட்டுகள் அமைத்தார்கள். துணை நடிகர், நடிகைகள் ஏராளமானோரை ஒப்பந்தம் செய்தார்கள்
 
ஆனால் திடீரென வடிவேலு படப்பிடிப்புக்கு வராமல் தவிர்த்தார். இதனால் தயாரிப்பு தரப்பில் இருந்து வடிவேலுவுடன் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் வடிவேலு படப்பிடிப்புக்கு வர முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.
 
இதனால் தனக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாக இயக்குனர் ஷங்கர் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சங்கத்தில் வடிவேலு மீது புகார் கொடுத்தார்.
 
தற்போது நடிகர் வடிவேலு தனது பிடிவாதத்தை தளர்த்திக் கொண்டு படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார்.
 
நீண்ட நாட்களுக்கு பிறகு இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க உள்ளன இந்தப் படம் அடுத்த தீபாவளிக்கு வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

கார்த்தியின் 'வா வாத்தியாரே' பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை! நாளை வெளியாக இருந்த நிலையில் சிக்கல்..!

என்னை வைத்து சண்டை போடுவதற்கு நீ யார்? பார்வ்தி - கம்ரூதீன் சண்டை..!

அடுத்த கட்டுரையில்
Show comments