சுந்தர் சி - வடிவேலு இணையும் படத்தின் டைட்டில் இதுதான்: பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்..!

Siva
வியாழன், 12 செப்டம்பர் 2024 (07:23 IST)
நீண்ட இடைவேளைக்குப் பிறகு இயக்குனர் சுந்தர் சி மற்றும் நகைச்சுவை நடிகர் வடிவேலு இணையும் படம் ஒன்று உருவாகி வருவதாக செய்தி வெளியான நிலையில் இந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சுந்தர் சி மற்றும் வடிவேலு கூட்டணி மிகப்பெரிய சக்சஸ் கூட்டணி என்று கோலிவுட் திரையுலகில் கூறப்பட்ட நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக பல ஆண்டுகளாக இருவரும் திரைப்படத்தில் இணையாமல் இருந்தனர்.

இந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு பின்னர் சுந்தர் சி இயக்கி நடிக்கும் திரைப்படத்தில் வடிவேலு நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் இந்த படத்திற்கு கேங்கர்ஸ் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வடிவேலு பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்றும் நேற்று இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

15 வருடங்களுக்குப் பிறகு இணையும் சுந்தர் சி மற்றும் வடிவேலு காமெடி கூட்டணி ரசிகர்கள் ரசிக்கும் வகையில் இருக்கும் என்றும் கைப்புள்ள, வீரபாகு மாதிரி சிங்காரம் என்ற கேரக்டரில் கேங்கர்ஸ் படத்தில் வடிவேலு நடித்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

கார்த்தியின் 'வா வாத்தியாரே' பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை! நாளை வெளியாக இருந்த நிலையில் சிக்கல்..!

என்னை வைத்து சண்டை போடுவதற்கு நீ யார்? பார்வ்தி - கம்ரூதீன் சண்டை..!

அடுத்த கட்டுரையில்
Show comments