Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை மாநகர் பாக்ஸ் ஆபிஸ் - முந்துகிறது வடகறி

சென்னை மாநகர் பாக்ஸ் ஆபிஸ் - முந்துகிறது வடகறி
, புதன், 25 ஜூன் 2014 (18:22 IST)
சென்னை சிட்டி பாக்ஸ் ஆபிஸில் முண்டாசுப்பட்டியை முந்தியது ஜெய்யின் வடகறி.
சென்றவார இறுதியில் (ஜுன் 20 முதல் 23 வரை) கோச்சடையான் சென்னை சிட்டியில் 2.9 லட்சங்களை தனதாக்கியது. வார நாள்களில் (ஜுன் 16 முதல் 19 வரை) ஏறக்குறைய அதே வசூலை பெற்றுள்ளது. இதுவரை கோச்சடையானின் சென்னை சிட்டி வசூல் 5.6 கோடிகள்.
 

கோச்சடையானுக்கு முந்தைய இடத்தில் யாமிருக்க பயமே உள்ளது.
webdunia

சென்ற வார இறுதியில் இதன் வசூல் 3.6 லட்சங்கள். வார நாள்களில் வசூல் 6.7 லட்சங்கள். இதுவரை சென்னை சிட்டியில் 2.8 கோடியை வசூலித்துள்ளது.
 

மஞ்சப்பை இந்த மாதத்தின் சர்ப்ரைஸ் ஹிட்.
webdunia

சென்ற வார இறுதியில் 24.6 லட்சங்களையும், வார நாள்களில் 34.4 லட்சங்களையும் இப்படம் வசூலித்துள்ளது. இதுவரை இதன் சென்னை சிட்டி வசூல் 2.3 கோடிகள்.

முண்டாசுப்பட்டிக்கு இந்த வாரம் இரண்டாவது இடம்.
webdunia

சென்ற வார இறுதியில் 31.2 லட்சங்களையும், வார நாள்களில் 31 லட்சங்களையும் வசூலித்துள்ளது. இதுவரை இதன் சென்னை சிட்டி வசூல் 1.02 கோடி.

சென்ற வாரம் வெளியான வடகறி பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
webdunia

ஜுன் 19 வியாழக்கிழமை வெளியான படம் முதல் மூன்று தினங்களில் 76 லட்சங்களை வசூலித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil