இரண்டாவது வாரத்திலும் வெற்றி நடைபோடும் வாழை… படக்குழு வெளியிட்ட போஸ்டர்!

vinoth
சனி, 31 ஆகஸ்ட் 2024 (12:15 IST)
தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய இயக்குனர்களில் ஒருவரான மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘வாழை’ படம்  கடந்த வெள்ளிக் கிழமை வெளியானது. இந்த படத்தில் கலையரசன், நிக்கிலா விமல், திவ்யா துரைசாமி மற்றும் பல குழந்தை நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, மாரி செல்வராஜ் ஹாட்ஸ்டார் நிறுவனத்தோடு இணைந்து தயாரித்துள்ளார். படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியானது.

வெளியானது முதல் வாழை திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படம் ரசிகர்களை உணர்ச்சி ரீதியாக உடைந்துவிடும் அளவுக்கு உருவாக்கப்பட்டிருந்தது. இதனால் படம் பார்த்த பலரும் வெளிவரும் அழுதுகொண்டே வெளியே வந்தனர். ரசிகர்களின் பாராட்டு வார்த்தைகளால் படத்துக்கு வரும் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே சென்றது.

இந்நிலையில் இப்போது படம் இரண்டாவது வாரத்திலும் வெற்றிகரமாக ஓடிவருகிறது. முதல் வாரத்தில் 250 தியேட்டர்களில் ஓடிய இந்த திரைப்படம் இரண்டாவது வாரத்தில் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ஓடுவதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகையர் திலகம் படத்துக்குப் பின் ஆறு மாதங்கள் எந்த வாய்ப்பும் வரவில்லை… கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த தகவல்!

சிம்பு –வெற்றிமாறன் கூட்டணியின் ‘அரசன்’ படத்தில் நடக்கும் அதிரடி மாற்றம்!

ஜனநாயகன் படத்தின் தமிழக விநியோக உரிமை கைமாறுகிறதா?... லேட்டஸ்ட் அப்டேட்!

ரஜினியின் அடுத்த பட இயக்குனர் யார்?... லிஸ்ட்டில் 8 பேர்!

சினிமாப் புகழ் என் குடும்ப வாழ்க்கையை பாதித்தது…. ஏ ஆர் ரஹ்மான் வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments