Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீங்க எந்த தப்பு செஞ்சாலும் நான்தான் மாட்டுவேன்… வாழை படத்தில் நடித்த சிறுவர்களுக்கு மாரி செல்வராஜ் அட்வைஸ்!

vinoth
புதன், 26 பிப்ரவரி 2025 (09:19 IST)
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியான ‘வாழை’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தில் கலையரசன், நிக்கிலா விமல், திவ்யா துரைசாமி மற்றும் பல குழந்தை நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, மாரி செல்வராஜ் ஹாட்ஸ்டார் நிறுவனத்தோடு இணைந்து தயாரித்தார்.

இந்த படம் ரசிகர்கள் உணர்ச்சி ரீதியாக உடைந்துவிடும் அளவுக்கு உருவாக்கப்பட்டிருந்தது. இதனால் படம் பார்த்த பலரும் வெளிவரும் அழுதுகொண்டே வெளியே வந்தனர். ஆனால் படம் ஓடிடியில் ரிலீஸான போது சில நெகட்டிவ்வான விமர்சனங்களையும் சந்தித்தது.

இந்நிலையில் வாழை படத்துக்காக தனியார் நிறுவனம் அளித்த விருது ஒன்றைப் பெற்றுக்கொண்ட மாரி செல்வராஜ் படத்தில் நடித்த சிறுவர்களான பொன்வேல் மற்றும் ராகுல் ஆகியோர் படிப்பில் கவனம் செலுத்தவேண்டும் எனக் கூறியுள்ளார். அவரது பேச்சில்  “ பொன் வேல் மற்றும் ராகுல் ஆகிய இருவரும் இப்போது படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளேன். ஏனென்றால் அவர்கள் எந்த தவறு செய்தாலும் நான்தான் மாட்டிக் கொள்வேன்.  வாழை படம் அவர்கள் மேல் வெளிச்சத்தைப் பாய்ச்சியுள்ளது. இவர்கள் எதை செய்தாலும் சமூகம் அவர்களை ‘வாழை’ பட நடிகர்கள் என்றுதான் சொல்வேன். அதனால் கவனமாக செயல்படுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இயக்குனர் மோகன் ஜி யின் அடுத்த படம் குறித்து இன்று வெளியாகும் அப்டேட்!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ டீசர் ரிலீஸ் அப்டேட்… குஷியான ரசிகர்கள்!

வெப் சீரிஸாக உருவாகும் பா ரஞ்சித்தின் ‘சார்பட்டா பரம்பரை’?

மணிரத்னத்தின் அடுத்த பட ஹீரோ இவர்தான்… வெளியான தகவல்!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments