Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இழுத்துக் கொண்டே செல்லும் வாடிவாசல்… தயாரிப்பாளர் தாணு எடுத்த அதிரடி முடிவு!

Webdunia
சனி, 23 ஜனவரி 2021 (16:36 IST)
வாடிவாசல் படத்தை 2022 ஆம் ஆண்டுதான் தயாரிப்பாளர் தொடங்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் பல சர்ச்சைகளுக்குப் பிறகு தீபாவளிக்கு ஓடிடியில் ரிலிஸ் ஆகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் அடுத்து அவர் வெற்றி மாறன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது. அந்த படத்துக்கான போஸ்டர் கூட வெளியானது. ஆனால் இப்போது சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்க உள்ளார். அதற்கடுத்தும் சில படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார்.

அதே போல வெற்றிமாறனும் இப்போது சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த இரு படங்களும் முடிந்த பின்னரே வாடிவாசல் ஆரம்பிக்கும் என சொல்லப்பட்ட நிலையில் இப்போது சூர்யா சிறுத்தை சிவா இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளாராம். இதனால் வாடிவாசல் திரைப்படத்தை பொறுமையாக 2022 ஆம் ஆண்டு தொடங்கிக் கொள்ளலாம் என்ற முடிவை தாணு எடுத்துள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிறந்த நாளில் ஜனநாயகன் அப்டேட் வேண்டாம்.. ஃபுல்லா அரசியல் தான்: விஜய் அதிரடி..!

நடிகை அதுல்யா ரவியின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

‘வாழை’ படப் புகழ் திவ்யா துரைசாமியின் க்யூட் க்ளிக்ஸ்!

இந்த ஆண்டின் மெகா பிளாக்பஸ்டர் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

தொடர்ந்து செய்த தவறு… இம்பேக்ட் பிளேயருக்கும் சேர்த்து அபராதம்!

அடுத்த கட்டுரையில்
Show comments