Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைமாறும் வாடிவாசல்… முன்னணி ஓடிடி நிறுவனம் முதலீடு!

Webdunia
புதன், 3 மே 2023 (08:20 IST)
சூர்யாவின் சூரரைப் போற்று  திரைப்படத்துக்குப் பிறகு அவர் வெற்றி மாறன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது. ஆனால் அந்த படத்துக்கான பணிகள் இப்போது தாமதம் ஆகி வருகின்றன. அதனால் சூர்யா தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த படத்தில் சூர்யாவுக்கு நிகரான ஒரு கதாபாத்திரத்தில் இயக்குனர் அமீரை நடிக்கவைக்க வெற்றிமாறன் ஒப்பந்தம் செய்திருந்தார். இந்நிலையில் படம் இப்போதைக்கு தொடங்காது, கைவிடப்பட்டு விட்டது என பல வதந்திகள் பரவிய நிலையில் விடுதலை படம் இந்த ஆண்டு மத்தியில் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ஜல்லிகட்டு சீக்வென்ஸ்களுக்காக பல கிராபிக்ஸ் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதையெல்லாம் லண்டனில் உள்ள ஒரு கிராபிக்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து இதுவரை உருவாக்கப்பட்ட காட்சிகளை மேற்பார்வையிட வெற்றிமாறன் லண்டனுக்கு சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்துக்காக முதலில் ஆஹா ஓடிடி நிறுவனம் முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது ஜி சினிமாஸ் நிறுவனம் முதலீடு செய்ய உள்ளதாகவும், அதற்காக தயாரிப்பாளர் தாணு ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் கிளிக்ஸ்… வைரல் ஆல்பம்!

ரித்து வர்மாவின் வெக்கேஷன் mode க்ளிக்ஸ்!

அமீர்கானின் ‘சித்தாரா ஜமீன் பார்’ படத்தின் தமிழ் டிரைலர் ரிலீஸ்!

துருவ நட்சத்திரம் ரிலீஸாகும்வரை வேறு எந்த படமும் கிடையாது… கௌதம் மேனன் உறுதி!

அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்தேனா?... பத்திரிக்கையாளரின் கேள்விக்குப் பதிலளித்த அதுல்யா ரவி!

அடுத்த கட்டுரையில்
Show comments