Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் மரணம்

பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் மரணம்
, சனி, 24 ஜனவரி 2015 (20:20 IST)
வயிற்றுப் புற்றுநோய் காரணமாக தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் சிகிச்சைப் பலன் இன்றி இன்று மாலை 5.50 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 90.


 
 
1925 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் வெம்பாக்கத்தில் பிறந்தவர் வி.எஸ்.ராகவன். 1954 ஆம் ஆண்டு வெளிவந்த வைரமாலை என்ற தமிழ்ப்படத்தில் முதன்முறையாக அறிமுகம் ஆனார்.
 
முதலில் நாடகத்திலும் பிறகு சினிமாவிலும் தொடர்ந்து பல ஆண்டுகளாக நடித்து வந்த வி.எஸ்.ராகவன் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார்.
 
1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள வி.எஸ்.ராகவன் ஆல் இன் ஆல் அழகுராஜா, கலகலப்பு, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடைசியாக நடித்த காத்தாடி திரைப்படம் இன்னும் வெளிவரவில்லை.
 
இந்நிலையில், உடல் நலக் குறைவால் வி.எஸ்.ராகவன் காலமானார். வி.எஸ்.ராகவன் இல்லம் மந்தைவெளி ராமகிருஷ்ணா நகரில் உள்ளது. நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை பெசன்ட் நகர் மயானத்தில் மறைந்த பழம்பெரும் நடிகரின் உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil