Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொல்லாம கொள்ளாம மாஸ்டர் மூன்றாம் லுக் போஸ்டரா..? விஜய் சேதுபதியின் மிரட்டலான லுக்!

Webdunia
திங்கள், 10 பிப்ரவரி 2020 (18:51 IST)
கைதி படத்தை தொடர்ந்து விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர். 
 
ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லி, கர்நாடகா ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது. வருகிற ஏப்ரல் மாதம் கோடை விடுமுறை தினத்தை குறிவைத்து வெளியாகவுள்ள இப்படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இப்படத்தின் ஷூட்டிங் பல்வேறு தடங்கலுக்கு பிறகு நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. 
 
இந்த படத்தின் விஜய் சேதுபதியின் மோஷன் போஸ்டர் அவரது பிறந்தநிலை முன்னிட்டு வருகிற ஜனவரி 16ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தனர். இதற்காக மரண வெய்ட்டிங்கில் காத்திருக்கும் ரசிகர்களுக்கு தற்போது எதிர்பாராத விதமாக விஜய் சேதுபதியின் தெலுங்கு பட போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.   வைஷ்ணவ் தேஜ் ஹீரோவாக நடிக்கும் "உப்பென்னா " என்ற இப்படம் வருகிற ஏப்ரல் 2ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதனை கண்ட தமிழ் சினிமா ரசிகர்கள் என்னது சொல்லாமல் கொள்ளாமல் மாஸ்டர் மூன்றாம் லுக் போஸ்டரா..? என ஒரு நிமிடம் பதறிப்போகின்றனர்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

வெண்ணிற உடையில் சமந்தாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

இப்போதே என்னை ஓய்வு பெற சொன்னாலும் மகிழ்ச்சிதான்.. ராஷ்மிகா நெகிழ்ச்சி!

அடுத்தடுத்து அதிரிபுதிரி ஹிட்.. சிரஞ்சீவி படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்ற இளம் இயக்குனர்!

50 கோடி ரூபாய் வசூலைக் கடந்த விஷால்- சுந்தர் சி யின் ‘மத கஜ ராஜா’!

அடுத்த கட்டுரையில்
Show comments