Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தண்ணி வண்டி - இது தம்பி ராமையா மகன் நடிக்கிற படத்தின் பெயர்

தண்ணி வண்டி - இது தம்பி ராமையா மகன் நடிக்கிற படத்தின் பெயர்
, வியாழன், 2 ஜூலை 2015 (14:36 IST)
திரையுலகுடன் எந்தவகையிலாவது தொடர்பு வைத்திருப்பவர்கள், தங்களின் ஆண் வாரிசை ஹீரோவாக்கவே முயல்கிறார்கள். ஹீரோ என்ற பெட்ரோமாக்ஸ் லைட்டுதான் இவர்களின் ஒரே இலக்கு.
 
விஜய், சூர்யா, கார்த்தி, விக்ரம் பிரபு. அதர்வா, பிரபுதேவா, வின்சென்ட் அசோகன், ராதாரவி, கார்த்திக், கௌதம் கார்த்திக், ஜெயம் ரவி என்று நீண்டு செல்லும் இந்தப் பட்டியலில் சிங்கமுத்துவின் மகன், மயில்சாமியின் மகன் என்று இன்னும் பலபேர் இருக்கிறார்கள். இதில் புதிதாக தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் இணைந்திருக்கிறார்.
 
உமாபதியை தனது இயக்கத்தில் ஹீரோவாக்கவே தம்பி ராமையா முயன்றார். அவர் இயக்கிய இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படம் சுமாராகவே போனது. அடுத்து இயக்கிய ஒரு கூடை முத்தம் பாதியிலேயே கைவிடப்பட்டது. அதனால், மகனை அறிமுகப்படுத்தும் பொறுப்பை வேறொரு இயக்குனரிடம் தந்திருக்கிறார். 
 
விளம்பரம் செய்யாமல் படத்தை தொடங்கி தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள். படத்துக்கு தண்ணி வண்டி என்று பெயர் வைத்திருப்பதாக கேள்வி.

Share this Story:

Follow Webdunia tamil