Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்தா பஞ்சாப்... உஷாரான தமிழ் சினிமா

உத்தா பஞ்சாப்... உஷாரான தமிழ் சினிமா

Webdunia
சனி, 18 ஜூன் 2016 (14:38 IST)
உத்தா பஞ்சாப் படம் நேற்று திரைக்கு வந்தது. அதற்கு முதல்நாள் படத்தின் திருட்டு டிவிடியை வெளியிட்டனர். 


 
 
இந்தி திரையுலகில் இப்படியெல்லாம் நடப்பது இல்லை. கெட்ட சகுனம், வேறென்ன சொல்ல. 
 
நேற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் நடத்தப்பட்டது. தலைவர் தாணு முதல் அவருக்கு எதிர் நிற்கும் விஷால்வரை பெரிய தலைகள் எல்லாம் ஆஜர். பல்வேறு பிரச்சனைகள் பேசப்பட்டாலும் அதில் பிரதான இடம்பிடித்தது திருட்டு டிவிடி. 
 
கூட்டம் முடிந்த பின் நிருபர்களிடம் பேசிய விஷாலின் பேச்சில் திருட்டு டிவிடி குறித்த கவலைதான் மண்டியிருந்தது. உத்தா பஞ்சாப் படத்தின் நிலை நாளைக்கே தமிழ் படங்களுக்கும் வரலாம். எந்த திரையரங்கில் திருட்டு டிவிடி எடுக்கப்படுகிறதோ அதனை கண்டறிந்து அந்தத் திரையரங்குக்கு தடைவிதிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் முன்வர வேண்டும். திருட்டு டிவிடியை ஒழிக்க மத்திய மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 
 
அப்படியே அதிக டிக்கெட் கட்டணம் விற்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்திருக்கலாமே.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

கோட் படத்தின் சேட்டிலைட் பிஸ்னஸில் சொதப்பிய தயாரிப்பு நிறுவனம்… 30 கோடி நஷ்டம்?

தென்காசியில் தொடங்கிய விடுதலை 2 ஷூட்டிங்!

படை தலைவன் படத்துக்குப் பிறகு பிரபல இயக்குனர் படத்தில் சண்முக பாண்டியன்!

அஜித் சிறுத்தை சிவா படத்தில் இருந்து வெளியேறுகிறதா சன் பிக்சர்ஸ்?

கைவிட்ட சூர்யா... விக்ரம் பக்கம் செல்லும் சுதா கொங்கரா!

அடுத்த கட்டுரையில்
Show comments