Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உதயநிதி ரீமேக் செய்ய விரும்பும் படம் எது தெரியுமா?

உதயநிதி ரீமேக் செய்ய விரும்பும் படம் எது தெரியுமா?
, வியாழன், 2 ஏப்ரல் 2015 (15:12 IST)
நான் ஸ்டாப் காமெடிதான் நம்ம ரூட்டு என்று தெளிவாக மேப் போட்டு வண்டியை ஓட்டிக் கொண்டிருக்கிறார் உதயநிதி. இன்று வெளியாகியிருக்கும் நண்பேன்டா படமும் இந்த ரூட்டில்தான் தயாராகியுள்ளது.
 
ஜாலியாக படம் பார்க்க விரும்பும் அனைவருக்கும் பிடித்த படம், பாண்டியராஜன் இயக்கி நடித்த முதல் படமான, ஆண்பாவம். எப்போது தொலைக்காட்சியில் போட்டாலும் ரசிகர்களை நகராமல் பிடித்து வைக்கும் மேஜிக் அந்தப் படத்துக்கு உண்டு.
 
ஆண்பாவம் படத்தை ரீமேக் செய்யும் ஆசை உதயநிதிக்கு உள்ளதாம். பிரபல நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அதனை தெரிவித்துள்ளார்.
 
அப்படி ஆண்பாவம் ரீமேக்கானால் பாண்டியராஜன், பாண்டியன், ரேவதி, சீதா வேடங்களில் நடிக்க ஆள்கள் கிடைப்பார்கள். வி.கே.ராமசாமிக்கு யாரைதான் போடுவார்கள்...?

Share this Story:

Follow Webdunia tamil