Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுசீந்திரனுக்கு உதயநிதி கல்தா

சுசீந்திரனுக்கு உதயநிதி கல்தா

சுசீந்திரனுக்கு உதயநிதி கல்தா
, செவ்வாய், 14 ஜூன் 2016 (10:47 IST)
சுசீந்திரன் இயக்கிய முதல் படம் வெண்ணிலா கபடிக்குழு, இரண்டாவது படம் நான் மகான் அல்ல இரண்டும் ஹிட்.


 


அதன் பிறகு அவர் இயக்கிய படங்களில் பாண்டிய நாடு மட்டுமே வெற்றி பெற்றது. மற்ற அனைத்துப் படங்களும் வியாபார ரீதியாக தோல்வியை தழுவின. கடைசியாக இயக்கிய பாயும் புலி அட்டர் ப்ளாப்பானது.
 
இந்நிலையில் உதயநிதி, விஷ்ணு விஷால் ஆகியோரை வைத்து புதிய படத்தை தொடங்கினார். மஞ்சிமா மோகனும் ஒப்பந்தம் செய்யப்பட்டு படப்பிடிப்பு தொடங்கியது. ஆனால், தொடங்கிய வேகத்தில் படத்திலிருந்து விலகியுள்ளார் உதயநிதி. விலகியதற்கான காரணம் தெரியவில்லை.
 
வேறு நாயகர்கள் யாரும் சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்க தயாராக இல்லாத நிலையில், தான் அறிமுகப்படுத்திய விஷ்ணு விஷாலை வைத்தே அடுத்தப் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். கிராமத்து கதையாக இது தயாராக உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தணிக்கை குழுவிற்கு குட்டு வைத்த நீதிமன்றம் - 89 காட்சிகளை நீக்கிய படத்திற்கு அனுமதி