Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியல் முன்னோட்டம் பார்க்கிறாரா உதயநிதி ஸ்டாலின்?

Webdunia
திங்கள், 24 ஜூலை 2017 (12:43 IST)
படங்களின் மூலம் அரசியலில் இறங்குவதற்கு முன்னோட்டம் பார்க்கிறாரா உதயநிதி ஸ்டாலின் என்ற கேள்வி எழுந்துள்ளது.


 

 
டாக்டர் பிள்ளை டாக்டர் என்பதைப் போல, அரசியல்வாதியின் மகனும் அரசியல்வாதியாகத்தான் ஆகணும் என்பது தமிழ்நாட்டின் விதி. ஆனால், அந்த விஷயத்தில் தன்னை மாறுபட்டவராக காட்டிக்கொள்ள ஆசைப்படுகிறார் உதயநிதி ஸ்டாலின்.  ‘தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்’ என்பார்களே… என்னதான் நடிப்பு, தயாரிப்பு என முழுநேரமும் சினிமாவில் இருப்பது போல காட்டிக் கொண்டாலும், கட்சிப் பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார் உதயநிதி ஸ்டாலின். அத்துடன், தான் அரசியலுக்கு வந்தால் எப்படியிருக்குமென படங்களின் மூலம் முன்னோட்டம் பார்த்து வருகிறார்.

கடைசியாக வெளியான ‘சரவணன் இருக்க பயமேன்’ படத்தில் அரசியல்வாதியாக நடித்திருந்தாலும், அது காமெடியாகத்தான் இருந்தது. ஆனால், சமீபத்தில் வெளியாகியிருக்கும் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்தின் டீஸரைப் பார்க்கும்போது, பக்கா அரசியல் படம் போலவே இருக்கிறது. ஊரில் செல்வாக்குடன் வளையவரும் ரா.பார்த்திபனை எதிர்க்கும் உதயநிதி, தேர்தலில் போட்டியிட்டு ஜெயிப்பதாகவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, தமிழகத் தேர்தலிலும் உதயநிதி விரைவில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கலாம்.

விஷால் நடிக்கும் அண்ணாமலை பயோபிக் திரைப்படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?... லேட்டஸ்ட் தகவல்!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்… ரீசண்ட் ஆல்பம்!

கணவரோடு வெளிநாட்டு கடற்கரையில் வைப் பண்ணும் ரகுல்… க்யூட் ஆல்பம்!

விஜய்யின் கோட் படத்தில் நடித்து முடித்த சிவகார்த்திகேயன்!

அஜித் படத்தைக் கண்டுகொள்ளாமல் பாலிவுட் செல்கிறாரா சிறுத்தை சிவா!

அடுத்த கட்டுரையில்
Show comments