Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவில் சாதிய பாகுபாடு..? பா.ரஞ்சித் கருத்துக்கு உதயநிதி பதில்

Webdunia
திங்கள், 3 ஜூலை 2023 (15:11 IST)
’மாமன்னன்’ படத்திற்கு சற்றுமுன் இயக்குனர் பா ரஞ்சித் விமர்சனம் செய்த நிலையில் அதற்கு அமைச்சர் உதயநிதி பதில் அளித்துள்ளார். அந்த பதிலில் அவர் கூறியிருப்பதாவது:
 
`மாமன்னன்' திரைப்படத்தைப் பாராட்டிய இயக்குநர் சகோதரர் பா.இரஞ்சித் அவர்களுக்கு நன்றி. சாதிய அடக்குமுறைகளும் - ஏற்றத்தாழ்வும் கழகம் மட்டுமல்ல, எந்த கட்சிக்குள் இருந்தாலும் அது அறவே ஒழிக்கப்பட வேண்டும்.
 
அனைவருக்குமான சுயமரியாதையை உறுதி செய்ய, தொடர் பரப்புரை செய்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது கழகம்.
 
ஆட்சி பொறுப்பேற்கும் போதெல்லாம் சட்டங்களாகவும் திட்டங்களாகவும் `சமூகநீதி'யை அரியணை ஏற்றி, அரசியல் தளத்தில் தொடர்ந்து போராடி வருகிறது கழக அரசு. அண்ணா-கலைஞர் வழியில் எங்கள் கழகத் தலைவர் அவர்களும் இப்பணியைத் தொடர்கிறார்.
 
`பராசக்தி'யில் தொடங்கி `மாமன்னன்' வரை கலைவடிவங்களிலும் `சமூகநீதி'யைத் தொடர்ந்து உயர்த்திப் பிடித்து வருகிறோம்.  
 
ஆயிரமாயிரம் ஆண்டு கால சனாதனத்திற்கு எதிராக, சமத்துவம் காண போராடும்  நூறாண்டுகால போராட்டம் இது. இன்னும் முழுமை பெறாத போராட்டமும்கூட. 
 
 ஒரே திரைப்படத்தின் மூலம் சமூகத்தில் தலைகீழ் மாற்றத்தை நிகழ்த்திவிட முடியாது என்பதையும் நாம் அனைவரும் அறிவோம். பெரியார்-அம்பேத்கர் 
 வழியில் மக்களுடன் தொடர்ந்து உரையாடி இம்மாற்றத்தை நிகழ்த்த முடியும். அதைநோக்கி நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம். 
 
இப்பயணத்தில் கழகம் மீதும் என் மீதும் இப்போது நம்பிக்கை கொண்டிருக்கும் சகோதரர் இரஞ்சித் அவர்களுக்கு நன்றி.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழ்ப் படத்துக்கு முதலில் நான்தான் இசையமைப்பாளர்… என்னை விரட்டிவிட்டார்கள்- சந்தோஷ் நாராயணன் ஜாலி பேச்சு!

கஞ்சா வியாபாரிகளோடு தொடர்பு? மன்சூர் அலிகான் மகன் கைது!

கலகலப்பு 3 படத்தில் நடிக்கப் போகும் நடிகர்கள் இவர்கள்தான்… வெளியான தகவல்!

சச்சினின் கைகளை விடாமல் பற்றிக்கொண்ட வினோத் காம்ப்ளே.. இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படம்!

புஷ்பா இரண்டாம் பாகத்தோடு முடியாது… கடைசி நேரத்தில் படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments