Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிக்கு ஐக்கிய அரபு அமீரகம் செய்த கெளரவம்.. ஆனால் இவ்வளவு தாமதமாகவா?

Siva
வியாழன், 23 மே 2024 (20:06 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஐக்கிய அரபு அமீரக நாட்டிற்கு சென்றுள்ள நிலையில் அங்கு அவருக்கு அந்நாட்டு அரசு கௌரவம் செய்த தகவல் வெளியாகி உள்ளன.

கடந்த சில மாதங்களாகவே ஐக்கிய அரபு அமீரக அரசு தமிழ் திரை உலக பிரபலங்களுக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவம் செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த விசா பெற்றவர்கள் அடுத்த 10 ஆண்டுகளுக்கு அந்நாட்டின் குடிமகன்கள் போலவே கருதப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஐக்கிய அரபு அமீரக நாட்டிற்கு சென்ற ரஜினிக்கு அந்நாட்டு அரசு கோல்டன் விசா கொடுத்து கௌரவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரக கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ரஜினிக்கு கோல்டன் விசாவை கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இதனை அடுத்து ஐக்கிய அரபு அமீரக அரசுக்கு ரஜினிகாந்த் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கமல்ஹாசன், சிம்பு உள்பட பல திரையுலக பிரபலங்களுக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு கோல்டன் விசா வழங்கி உள்ள நிலையில் மிகவும் தாமதமாகவே ரஜினிக்கு வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கல்கி படம் இவ்வளவு நேரம் ஓடுமா?... ரசிகர்களை ஜெர்க் ஆக்கும் ரன்னிங் டைம் தகவல்!

அரவிந்த் சாமி தொடுத்த வழக்கில் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத் தயாரிப்பாளருக்கு பிடிவாரண்ட்!

என் அப்பாவின் பயோபிக்கை இயக்குவேனா?... ஸ்ருதிஹாசன் அளித்த நேர்மையான பதில்!

தமிழ் ரசிகர்களுக்காக டப்பிங் ஆகி வருகிறது ஆவேசம்!

இந்தியன் 2 படத்தை இங்கிலாந்தில் ரிலீஸ் செய்யும் இரண்டு முன்னணி நிறுவனங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments