Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போனி கபூர் வீட்டில் மேலும் இரு பணியாளர்களுக்கு கொரோனா! அதிர்ச்சி தகவல்!

Webdunia
வெள்ளி, 22 மே 2020 (17:53 IST)
அஜித்தின் வலிமை படத் தயாரிப்பாளர் போனி கபூரின் வீட்டில் பணிபுரியும் 3 ஊழியர்களுக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் பிரபல தயாரிப்பாளருமான போனி கபூர் தற்போது அஜித் நடிக்கும் வலிமை படத்தை தயாரித்து வருகிறார். கொரோனாவால் லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது தன்னுடைய வீட்டில் மகள்களுடன் இருகிறார்.

மும்பை அந்தேரியில் அமைந்துள்ள அவரது வீட்டில் பணியாற்றும் பணியாளரான 23 வயது சரண் சாகுவுக்கு மே 16 ஆம் தேதி முதல் உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா பாஸீட்டிவ் என்று முடிவு வந்தது. இதையடுத்து அவர் வீட்டில் இருக்கும் அனைத்துப் பணியாளர்களும் போனி கபூர் குடும்பத்தினரும் தனிமைப்படுத்திக் கொண்டனர்.

பணியாளர்கள் அனைவரிடமும் நடத்திய சோதனையில் இப்போது மேலும் இருவருக்குக் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. எனினும் போனி கபூர் மற்றும் அவருடைய இரு மகள்களான ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகியோர் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பின்றி உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தேவதை வம்சம் நீயோ… திஷா பதானியின் கலர்ஃபுல் க்ளிக்ஸ்!

ரிலீஸுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பே 130 கோடி ரூபாய் சம்பாதித்த நோலனின் ‘ஒடிசி’!

பிரபாஸின் ‘ஸ்பிரிட்’ படத்துக்கு இசையமைக்கிறாரா அனிருத்?

நடிப்பு சலிப்பை ஏற்படுத்தினால் uber ஓட்டுனர் ஆகிவிடுவேன் – ஃபஹத் பாசில் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments