Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்க்கு முதலிடம்! அஜித் எத்தனையாவது இடத்தில்..? – இந்த ஆண்டின் ட்ரெண்டிங் நடிகர்கள்!

Webdunia
ஞாயிறு, 12 டிசம்பர் 2021 (15:15 IST)
இந்த ஆண்டில் அதிகம் ட்ரெண்டான தென்னிந்திய நடிகர்களின் டாப் 10 பட்டியலை ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் பல கோடி மக்களால் பயன்படுத்தப்படும் சமூக செயலியாக ட்விட்டர் இருந்து வருகிறது. போராட்டம் தொடர்பான ஹேஷ்டேகுகள் முதல் காமெடி ஹேஷ்டேகுகள் வரை அனைத்தும் ட்விட்டர் ட்ரெண்டிங் மூலமாக கவனம் பெறும் நிலையில் உள்ளது. இந்நிலையில் இந்த 2021ம் ஆண்டில் அதிகம் ட்ரெண்டான ஹேஷ்டேகுகள், சம்பவங்கள் உள்ளிட்ட டாப் 10 பட்டியலை முன்னதாக ட்விட்டர் வெளியிட்டது.

அந்த வகையில் தற்போது தென்னிந்தியாவில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட நடிகர்கள் குறித்த டாப் 10 பட்டியலை ட்விட்டர் வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் விஜய் முதலிடத்தை பிடித்துள்ளார். இரண்டாம் இடத்தில் தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் உள்ளார். சூர்யா 4வது இடத்திலும், ரஜினி 7வது இடத்திலும், தனுஷ் 9வது இடத்திலும் உள்ளனர். இந்த ஆண்டில் அஜித் படங்கள் எதுவும் வெளியாகாததாலும், அஜித்திற்கு நேரடியாக ட்விட்டரில் கணக்கு இல்லாததாலும் அவரது பெயர் 10வது இடத்தை பிடித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் அடுத்த படத்தை இயக்குவது தனுஷா? கார்த்திக் சுப்புராஜா? பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் யூடியூபர்கள்..!

பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள்… கீர்த்தி பாண்டியனின் க்யூட் க்ளிக்ஸ்!

நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

சிவகார்த்திகேயனை இயக்கும் படம் எப்போது தொடங்கும்?... வெங்கட்பிரபு கொடுத்த அப்டேட்!

அடுத்த ‘பாண்ட் கேர்ள்’ சிட்னி ஸ்வீனியா?... ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments