Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விபத்தில் சிக்கிய TTF வாசன்… சர்வீஸ் சாலையில் வீலிங் செய்ய முயன்ற போது நடந்த விபரீதம்!

Webdunia
திங்கள், 18 செப்டம்பர் 2023 (06:43 IST)
யூடியூபர் டிடிஎஃப் வாசன் அதிவேகமாக மோட்டார் பைக் ஓட்டி அதை வீடியோவாக எடுத்து போட்டு இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர். அதிலும் அவர் வீடியோக்களில் வேகமாக பைக் ஓட்டுவது, கையைவிட்டு, ஓட்டுவது, விபத்து ஏற்படும்படி வாகனங்களை இயக்குவதாக அடிக்கடி இவர் மீது போலீஸ் ஸ்டேஷனில் புகார்கள் குவிந்து சில முறை அவர் கைதும் செய்யப்பட்டார்.

ஆனாலும் இளைஞர்கள் மத்தியில் அவருக்கு மிகப்பெரிய அளவில் பிரபலம் கிடைத்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் அவர் நடிக்கும் மஞ்சள் வீரன் என்ற படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில் நேற்று காஞ்சிபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது வீலிங் செய்ய முயன்ற போது அவரின் இரு சக்கர வாகனம் நிலைகுலைந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் காயமடைந்த வாசன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் தொடங்கும் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தின் ஷூட்டிங்!

மணிரத்னம் முதல் கௌதம் மேனன் வரை… என்னிடம் ஒருவார்த்தைக் கூட கேட்கவில்லை –வைரமுத்து ஆதங்கம்!

பாகுபலி இரண்டு பாகங்களையும் இணைத்து ரி ரிலீஸ்… எதிர்பார்ப்பை எகிற வைத்த தகவல்!

புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த சண்முக பாண்டியனின் ‘படை தலைவன்’ படக்குழு!

ஜனநாயகன் படத்தின் தமிழக விநியோக உரிமையைக் கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments