Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜெயலலிதாவாக மாற நடிகை த்ரிஷா ஆர்வம்!

ஜெயலலிதாவாக மாற நடிகை த்ரிஷா ஆர்வம்!

ஜெயலலிதாவாக மாற நடிகை த்ரிஷா ஆர்வம்!
, வியாழன், 27 அக்டோபர் 2016 (15:00 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக பல வருடமாக இருந்து வருகிறார் நடிகை த்ரிஷா, இவர் நடித்த கொடி திரைப்படம் தீபாவளிக்கு பிரம்மாண்டமாக வெளியாகிறது. இந்த படத்தில் உள்ளூர் அரசியல்வாதியாக இவர் நடித்துள்ளார்.


 
 
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க விரும்புவதாக த்ரிஷா கூறியுள்ளார். முதல்வர் ஜெயலலிதாவின் கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அதைவிட பெரிய மகிழ்ச்சி ஒன்றுமில்லை என கூறினார் த்ரிஷா.
 
முதல்வர் ஜெயலலிதாவும் முன்னணி நடிகையாக இருந்து பின்னர் தான் அரசியலுக்கு வந்தார். அதே போல த்ரிஷாவும் முன்னணி நடிகையாக இருக்கிறார். மேலும் முதல்வர் ஜெயலலிதா மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோர் சென்னையில் உள்ள சர்ச் பார்க் பள்ளியின் முன்னாள் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
முதல்வர் ஜெயலலிதா போல நடிக்கும் மகத்தான வாய்ப்பு கிடைத்தால் அதை கண்டிப்பாக தனது சிறப்பான நடிப்பை த்ரிஷா வெளிப்படுத்துவார். சில ஆண்டுகளுக்கு முன்னர் முதல்வர் ஜெயலலிதா கையால் த்ரிஷா விருது வாங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சௌந்தர்யா இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்கிறார்