ரஜினிக்கு ஜோடியாக திரிஷா!

Webdunia
வெள்ளி, 17 ஆகஸ்ட் 2018 (11:14 IST)
காலா படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இமயமலைப் பகுதிகளில் நடந்து வருகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த் கல்லூரி வார்டனாக நடிப்பதாக தெரிகிறது. 
தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மக்களுக்கு பிடிக்கும் வகையில்  ஜனரஞ்சகமான வகையில் படம் இருக்கும் என படக்குழு கூறுகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிப்பது அனைவருக்கும் தெரிந்ததே. படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடித்து வருகிறார் . மற்றொரு நாயகியாக திரிஷா இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. இதனை படக்குழு ரகசியமாகவே இதுவரை வைத்திருந்திருக்கிறது. திரிஷாவுக்கு ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக ஆசை இருந்தது தற்போது இந்த ஆசை  நிறைவேறியுள்ளது.
 
ரசிகர்கள் விரும்பும் வகையில் ரஜினிகாந்த் கதாபாத்திரத்தை படத்தில் சித்தரித்து இருப்பதாகவும்; இந்த வருடம் இறுதிக்குள் பட வேலைகளை முடித்து அடுத்த வருடம் ஆரம்பத்தில் படத்தை  திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளதாகவும் கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கிளாமர் லுக் க்ளிக்ஸ்!

ரஜினி படத்தில் இருந்து விலகுகிறேன்… சுந்தர் சி திடீர் அறிவிப்பு!

பணமோசடி வழக்கு… இளம்பெண்ணின் தந்தை கொடுத்த புகாரில் ‘பிக்பாஸ்’ புகழ் தினேஷ் கைது!

மீண்டும் இணையும் ராஜமௌலி & ஜூனியர் என் டி ஆர்… பயோபிக் படமா?

விஜய் சேதுபதி நடிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கும் படத்தில் இவர்தான் ஹீரோயின்!

அடுத்த கட்டுரையில்
Show comments